குமாரபுரம் படுகொலையின் 23ம் ஆண்டு நினைவேந்தல்.

திருகோணமலை கிளி வெட்டி, குமாரபுரம் படுகொலையின் 23ம் ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது.

கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நினைவேந்தலில் படுகொலையானவர்களின் நினைவாக சுடரினை நல்லூரைப் பிரதேச சபை உறுப்பினர் திருமதி வாசுகி ஏற்றி வைக்க, செ.கஜேந்திரன் நினைவுக் கல்லுக்கு மலரஞ்சலியை ஆரம்பித்து வைத்தார்.

இந் நினைவேந்தலில் சட்டத்தரணி திரு காண்டீபன் கலந்து நினைவுரையாற்றினார்.