மருந்தடித்த பழங்களை அடையாளம் காண குழு!

மருந்தடித்த பழங்களை அடையாளம் காண குழு!

யாழ்ப்­பா­ணம், நல்­லூர் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் மருந்­த­டித்த பழங்­க­ளைப் பிடிக்க சிறப்­புச் செய­ல­ணி­யொன்று உரு­வாக்­கு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

நல்­லூர் பிர­தேச சபை­யின் மாதாந்த அமர்வு சபை மண்­ட­பத்­தில் த.தியா­க­மூர்த்தி தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. இந்த அமர்­விலே சபை உறுப்­பி­னர் கௌசல்யா குறித்த தீர்­மான வரைவை முன்­மொ­ழிந்­தார்.

அவர் தனது தீர்­மான வரை­வில், பொது­மக்­க­ளுக்கு பெரும் நோய்­களை ஏற்­ப­டுத்தி உயிர் ஆபத்தைக் கொண்­டு­வ­ரும் மருந்து விசி­றிய பழங்­களை முற்­றா­கத் தடை செய்ய வேண்­டும் – என்று குறிப்­பிட்­டார்.

இது தொடர்­பில் கருத்து தெரி­வித்த சபை உறுப்­பி­னர் இரா­ச­லிங்­கம், சந்­தை­க­ளி­லும் பழக் கடை­க­ளி­லும் ஏரா­ள­மான மருந்து விசி­றிய பழங்­கள் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.

இதனை வாங்கி உட்­கொள்­ப­வர்­கள் பல பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். எனவே இதற்­கென நாம் சிறப்­புச் செய­லணி ஒன்றை பொது­சு­கா­தார பரி­சோ­த­கர் தலை­மை­யில் உரு­வாக்கி விரை­வான செயற்­பாட்­டில் இறங்க வேண்­டும் – என்­றார்.

இதன் பின்­னர் கருத்­துத் தெரி­வித்த சபை உறுப்­பி­னர் சிவ­லோ­சன்,
இந்தப் பிரச்­சனை தொடர்­பாக ஏற்­க­னவே பொதுச்­சு­கா­தார பரி­சோ­த­கர்­கள் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­ற­னர். எனி­னும் அவர்­கள் தங்­க­ளின் சட்ட நட­வ­டிக்­கையை விரிவு படுத்த வேண்­டும்.

இதற்கு நாம் பொதுச்­சு­கா­தார பரி­சோ­த­கர்­க­ளுக்கு அழுத்­தங்­களை வழங்கி மருந்து அடித்த பழங்­கள் விற்­பனை செய்­யும் அனை­வ­ரை­யும் பிடிக்க வேண்­டும்.

இது தொடர்­பில் பத்­தி­ரி­கை­கள் ஊடாக விளம்­ப­ரப்­ப­டுத்தி வியா­பா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்­த­லும் கொடுக்க வேண்­டும் – -என்­றார்.

இறு­தி­யாக நல்­லூர் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குள் மருந்து விசி­றிய பழங்­களை விற்­பனை செய்­வோர்­மீது நட­வ­டிக்கை எடுக்க பொதுச்­சு­கா­தார பரி­சோ­த­கர் தலை­மை­யில் சிறப்­புச் செய­ல­ணி­யொன்றை உரு­வாக்­கு­வது என தீர்­மா­னிக்­கப்­பட்­டது.