ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய சபாநாயகர் அனுமதி!

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைது செய்வதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அனுமதி வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கு சபாநாயகர் நேற்று (திங்கட்கிழமை) அனுமதி வழங்கியுள்ளதாக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.