நல்­லூர் பிர­தேச சபையால் சிறப்பு செயலணியை உருவாக்க தீர்மானம்!

நல்­லூர் பிர­தேச சபையால் சிறப்பு செயலணியை உருவாக்க தீர்மானம்!

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் இரசாயன கலவை பயன்படுத்தப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டு பிடிப்பதற்கு சிறப்பு செயலணி ஒன்று உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நல்­லூர் பிர­தேச சபை­யின் மாதாந்த அமர்வு சபை மண்­ட­பத்­தில் த.தியா­க­மூர்த்தி தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்­பெற்­றது.

இந்த அமர்­வில் சபை உறுப்­பி­னர் கௌசல்யா, இராசாயண கலவை கலந்த மருந்துக்களை விசிறி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதனை தடுக்கவேண்டும்.

அதனால் பொது­மக்­க­ளுக்கு பெரும் நோய்­களை ஏற்­ப­டுத்தி உயிர் ஆபத்து கூட ஏற்படலாம் என தெரிவித்து தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இது தொடர்­பாக கருத்து தெரி­வித்த சபை உறுப்­பி­னர் இரா­ச­லிங்­கம்,

“சந்­தை­க­ளி­லும் பழக் கடை க­ளி­லும் ஏரா­ள­மான மருந்தடித்த பழங்­கள் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. இதனை பெற்று உட்­கொள்­ப­வர்­கள் பல பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.

எனவே இதற்­கென நாம் சிறப்­புச் செய­லணி ஒன்றை பொது­சு­கா­தார பரி­சோ­த­கர் தலை­மை­யில் உரு­வாக்கி விரை­வான செயற்­பாட்­டில் இறங்க வேண்­டும்” என்­றார்.

அதனை சபை ஏக மனதாக ஏற்று மருந்தடித்த பழங்களை விற்பனை செய்வதனை தடுக்கவும், விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுகாதார பரிசோதகர் தலைமையில் விசேட செயலணி ஒன்று உருவாக்க சபை தீர்மானித்துள்ளது.