எரிபொருள் சூத்திரம் மக்களை ஏமாற்றும் செயல்!

எரிபொருள் சூத்திரம் மக்களை ஏமாற்றும் செயல்!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலைச் சூத்திரமானது ஏமாற்றும் செயற்பாடாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“விலைச்சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த விலைச்சூத்திரமானது மக்களை ஏமாற்றும் செயலாகும். நாம் ஒருபோதும் இந்த விலைச் சூத்திரத்தினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமையவிருக்கும் எமது அரசாங்கமானது இந்த ஏமாற்றும் விலைச்சூத்திர முறையினை நடைமுறைப்படுத்தப் போவதில்லை.

மேலும் இந்த விலைச்சூத்திர முறையின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கும் எமது அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்” என ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.