யாழில் போதைப்பொருள் வைத்திருந்தவருக்கு 3 வருடம் சிறை தண்டனை!

ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதித்து அதனை 10 வருடங்களுக்கு நீதிமன்று ஒத்திவைத்துள்ளது. அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் விதித்துள்ளது.

யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் நீதவான் முன்னிலையில் நடைபெற்ற போது , குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , நீதவான் அவருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தார்.

அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் விதித்தார்.