வரவு செலவு திட்டத்தின் மூலம் தீர்வு வழங்குக!- ஆர்ப்பாட்டம்

அடுத்த நிதியாணடுக்கான வரவு செலவு திட்டத்தில் தங்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தி கலைத்துள்ளனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் இன்று (புதன்கிழமை) கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டப்படிப்பினை நிறைவு செய்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமக்கான உரிய வேலைவாய்ப்பை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து பட்டதாரிகள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.