வரவு செலவுதிட்டத்திற்கு தேசிய அரசாங்கம் தடையாக அமையாது!

வரவு செலவுதிட்டத்திற்கு தேசிய அரசாங்கம் தடையாக அமையாது!

தேசிய அரசாங்கம் ஒருபோதும் வரவு செலவுத்திட்டத்திற்கு தடையாக அமையாது. தேசிய அரசாங்கம் உருவாக்கப்படாவிட்டாலும் வரவு செலுத்திட்டத்திற்கான பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்வோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தரப்புடன் ஒன்றிணைந்து செயற்பட தனது விருப்பத்தினை வெளியிட்டுள்ள நிலையில் அவர்கள் இணைத்துக்கொள்ளும் நோக்கிலும் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்தி கொள்வதற்காகவுமே தேசிய அரசாங்கத்துக்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதாகவும் அவ்வாறு தேசிய அரசாங்கம் உருவாக்கப்படும் பட்சத்தில் அமைச்சக்களின் எண்ணிக்கை 35 அல்லது 36 ஆக உயர்வடையலாம் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தர்ர.

இன்று புதன்கிழமை அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.