வவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது!

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நடவடிக்கையின்போது இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போதை ஒழிப்புப்பிரிவினர் மேலும் தெரிவிக்கும்போது,

இன்று பிற்பகல் வவுனியா தேக்கவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் போதைப் பொருட்களுடன் நடமாட்டம் காணப்படுவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருக்குக்கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சென்ற போதை ஒழிப்பிரிவினரின் தேக்கவத்தைப்பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 25 வயதுடைய இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 10 மில்லிக்கிராம் மற்றும் 30மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.