உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் விவசாயி ஒருவர் கைது!

உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் விவசாயி ஒருவர் கைது!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில், சட்டவிரோதமாக உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று (புதன்கிழமை) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மாவடிவேம்பு 02 ம் பிரிவு கிராம சேவகர் வீதியிலுள்ள குறித்த விவசாயின் வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்த உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த விவசாயி நேற்று இரவு தொப்பிக்கலை குருக்கல்மடு பிரதேசத்தில் குறித்த துப்பாக்கியுடன் வயலில் இரவு நேரக் காவலில் ஈடுபட்டு விட்டு அதனை வீட்டிற்கு கொண்டுவந்த போதே கைது செய்யப்பட்டமை குறிப்பித்தக்கது.