வாகன விபத்தில் சிக்கி பெண்ணெருவர் பலி!

வாகன விபத்தில் சிக்கி பெண்ணெருவர் பலி!

குருநாகல் பகுதியில் இன்று புதன்கிழமை முற்பகல் 10.20 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி பெண்ணெருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் அதே திசையில் பயணித்த டிப்பர் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானமையினாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவித்துள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டனர் உட்பட அதில் பயணித்த பெண்ணெருவமரும் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 55 வயதடைய வெல்லவ பகுதியை சேர்ந்த சந்திராவதி எனப்படுபவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை சம்பவத்துடன் , தொடர்புடைய டிப்பர் சாரதி லைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.