மட்டக்களப்பில் ஊருக்குள் நுழைந்த முதலை; பொதுமக்கள் மடக்கிப்பிடிப்பு

மட்டக்களப்பில் ஊருக்குள் நுழைந்த முதலை; பொதுமக்கள் மடக்கிப்பிடிப்பு

ஊருக்குள் நுழைந்த முதலை குட்டியொன்றை ஊர் மக்கள் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி கிராம சேவையாளர் பிரிவில் மாணிக்கப்பிள்ளையார் வீதி பகுதியில் வீட்டு வளாகத்திற்குள் புகுந்த ஐந்து அடி நீளமுள்ள முதலை குட்டி ஒன்றை அப்பகுதி மக்கள் பிடித்து வனஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொதுமக்களால் பிடிக்கப்பட்ட முதலைக்குட்டி தொடர்பாக மட்டக்களப்பு வனஜீவராசி திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகை தந்த வனஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர்கள் முதலை குட்டியை பாதுகாப்பான முறையில் விடுவிப்பதற்காக கொண்டு சென்றுள்ளனர்.