“படுகொலை சூழ்ச்சியாளர்களை அறிய ஆவலாக உள்ளேன்”

“படுகொலை சூழ்ச்சியாளர்களை அறிய ஆவலாக உள்ளேன்”

ஜனாதிபதியை படுகொலை செய்வது தொடர்பான சூழ்ச்சி குறித்த விசாரணை அறிக்கையின் தகவல்களை விரைவில் வெளிப்படுத்துமாறு ஐ.தே.க. கோரியுள்ளது.

ஜனாதிபதி படுகொலை சூழ்ச்சி தொடர்பான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, தகவல்களை விரைவில் வெளிப்படுத்துமாறு பிரதி அமைச்சர் நளின் பண்டார கோரியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி கொலை சூழ்ச்சி அறிக்கையின் தகவல்களை ஆராயந்து பார்க்கவும், அந்த சூழ்ச்சியாளர்கள் யார் என்பதை அறிந்துகொள்ளவும் தாம் ஆவலாக உள்ளதாகவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குறித்த அறிக்கையை தங்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.