கென்யாவில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் ஐவர் பலி!

கென்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கெரிசோ கவுன்டியில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

மசாய் ஒமாரா என்ற இடத்திலிருந்து லோட்வார் நோக்கி பயணித்த விமானம் ஒன்றே விபத்துக்குள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெரிசோ கவுன்டி வான் பரப்பில் பறந்து கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்த விமானம் கீழே வீழ்ந்து நொருங்கியது.

இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கென்யா நாட்டவர்கள் அல்ல எனவும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விமானத்தின் இயந்தியத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப பிரச்சினை காரணமாக இந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது.

மேலும் இந்த விமான விபத்து குறித்து பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.