பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு ஆபரணங்களை தயாரிக்கும் கலைஞர்கள்!

பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு ஆபரணங்களை தயாரிக்கும் கலைஞர்கள்!

பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகளைக் கொண்டு ஆபரணங்களையும், கவர்ச்சியான அணிகலன்களையும் தயாரிக்கும் பணியில் உக்ரேன் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெரிய பொதி நிறைய வீட்டில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளுடன், உக்ரேன் கலைஞரான மரியா சொரொகினா, கிவ் நகரத்தில் உள்ள ஒரு மீள்சுழற்சி மையத்திற்கு செல்கிறார்.

ஒவ்வொரு வாரயிறுதியிலும் அவர் தனது வீட்டுக் கழிவுப் பொருட்களை மீள்சுழற்சி செய்வதற்கான பொறுப்புடன் அங்கு எடுத்துக் செல்கிறார்.

ஏனைய சூழல்பாதுகாப்பு மீள்சுழற்சி ஆர்வலர்களைப் போன்றல்லாது இவர் ஒரு சில புதையல்களுடன் வீட்டுக்கு திரும்புகிறார்.

மீள்சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும், கவர்ச்சியான ஆபரணங்களையும் அவர் பதிலீடாக பெற்றுக் கொள்கிறார்.

பயன்பாட்டு உதவாதது என்று ஒதுக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மிகவும் மதிப்புமிக்க உபகரணங்களாக மாற்றும் இந்த செயற்பாட்டை ‘upcycling’ என்று பெயரிட்டுள்ளனர்.

ஆக்கபூர்வமாக இந்தக் கழிவுப் பொருட்களை மீள்சுழற்சி செய்து அழகான மற்றும் பயன்மிக்க பொருட்களாக மாற்றும் வழக்கம் தொடர்பில் உக்ரேனின் தற்போது விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது அங்கு மிகப் பிரபலமான நவநாகரீக ஆபரண கலையாகவும் மாற்றம் பெற்றுள்ளது. பாஷன் கண்காட்சிகளின் போதும் இவ்வாறான உபரணங்கள் பயன்படுத்தப்படுவது அங்கு வழக்கமாகிவிட்டது.