அதிவேக நெடுஞ்சாலையில் நாற்காலியை வீசியெறிந்த கனடா பெண் கைது!

அதிவேக நெடுஞ்சாலையில் நாற்காலியை வீசியெறிந்த கனடா பெண் கைது!

உயரமான கட்டிடத்தின் பல்கனியில் இருந்து அதிவேக நெடுஞ்சாலை மீது நாற்காலியை தூக்கியெறிந்த பெண்ணைக் கைது செய்துள்ளதாக ரொறென்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

19 வயதான மார்செல்லா ஸொய்யா என்ற பெண் பெரும் ஆபத்தை உண்டாக்கும் குறும்புச்செயல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கியுள்ளார்.

அவரது இந்த அபாயம் மிகுந்த குறும்புச்செயல் கமராவில் பதிவுசெய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டிருந்த நிலையில், அந்த காணொளி சுமார் 700,000 தடவைகள் இணையவாசிகளால் பார்க்கப்பட்டுள்ளது.

கனடாவின் மிகுந்த நெரிசல் மிக்க கார்டிநெர் அதிவேக நெடுஞ்சாலை மீதே அவர் நாற்காலியை வீசியெறிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த சம்பவத்தின் போது யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.