நகைச்சுவை நடிகை மதுமிதாவுக்கு திருமணம்!

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உட்பட பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள மதுமிதா திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

இவர், உதவி இயக்குநர் மோசஸ் ஜோல் என்பவரை நாளை (பெப்ரவரி 15 ஆம் திகதி) திருமணம் செய்யவுள்ளார்.

தனது தாயாரின் தம்பியின் மகனே மணமகன் என்று தனது திருமணம் குறித்து பேட்டியொன்றில் மதுமிதா தெரிவித்தார்.

அத்துடன் தங்களது திருமணத்தை இரண்டு குடும்பத்தினர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் ஏற்கனவே தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ள மதுமிதா, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்த பின்னர் மேலும் பல வாய்ப்புகளை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.