சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் காலமானார்.

சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் காலமானார்.

ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர், கலாபூஷணம் சிவமகாலிங்கம் தனது 70 ஆவது வயதில் யாழ். கோண்டாவில் பொற்பதி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (13) காலமானார்.

தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பணியாற்றிய இவர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளராகவும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளராகவும் பணியாற்றியிருந்தார்.

கந்தபுராணம் திருமந்திரம் போன்றவற்றுக்குப் பொழிப்புரைகளையும் இவர் எழுதியிருந்தார்.

சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாதாந்தம் வெளியிடப்படும் நூலுக்கு கட்டுரைகளை எழுதியதுடன், பல ஆன்மீக நூல்களை யும் எழுதியும் சாதனை படைத்துள்ளார்.

திருமந்திரத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவரின் சமய சொற்பொழிவுகள் தனித்துவமானவை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அன்னார் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கத்தின் சகோதரருமாவார்.