பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

பெண்களுக்கு எதிரான வன்முறையினை இல்லாது ஒழிப்பதற்கான நூறு கோடி மக்கள் எழுச்சி நாள் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை கொண்டாடும் வகையில் வல்லமை சமூக மாற்றத்திற்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலி சந்தி பகுதியில்  பெண்கள் வன்முறைக்கு எதிராக  கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று வலுப்பெற்றது.

இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த கண்டன ஆர்ப்பாட்டம் யாழ் பல்கலைக்கழகம் நுழை வாயில் வரை சென்று நிறைவு பெற்றது.