ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் – 18 வீரர்கள் பலி!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் – 18 வீரர்கள் பலி!

ஜம்மு-காஷ்மீரில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற (Central Reserve Police Force) வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 18 வீரர்கள் உயரிழந்துள்ளதோடு பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மிரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலை வழியாக மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள்.

இதன்போது வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.

குறித்த வாகனத்தில் அதிகமான வீரர்கள் சென்றநிலையில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.