மாயமான 7வயதுச் சிறுமி பத்திரமாக மீட்பு.

மாயமான 7வயதுச் சிறுமி பத்திரமாக மீட்பு.

ஒட்டாவாவில் மாயமான 7வயதுச் சிறுமியை பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

காலிடி மஸா என்ற 7 வயதுச் சிறுமி ஒட்டாவா பகுதியில் கடந்த சனிக்கிழமை மாயமானார்.

குறித்த சிறுமி கிழக்குப் பகுதியான ஒட்டாவா அருகிலுள்ள ட்ரம்ப்லே வீதிப் பகுதியில் சுமார் 12:00 மணியளவில் கடைசியாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டாவா பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், குறித்த சிறுமி பொதுமக்கள் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.