மதுஷ் விவகாரம்! இலங்கையின் உதவியை நிராகரித்த டுபாய் பொலிஸ்!

சூடு பிடிக்கும் மதுஷ் விவகாரம்! இலங்கையின் உதவியை நிராகரித்த டுபாய் பொலிஸ்!

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மாகந்துரே மதுஷ் விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுஷின் கைதினை தொடர்ந்து இலங்கையின் பிரபல அரசியல்வாதிகளின் தொடர்பான பல ரகசியங்கள் அம்பலமாகி வருகின்றன.

இந்நிலையில் மதுஷ் தலைமையிலான குழுவினரிடம் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை பொலிஸார் அனுமதி கோரியிருந்தனர்.

எனினும் இலங்கை பொலிஸாரின் எந்தவொரு உதவியும் தேவையில்லை என டுபாய் பொலிஸார் நிரகாரித்துள்ளனர்.

ஒரு பொலிஸ் அதிகாரியை கூட அனுமதிக்க முடியாது என டுபாய் பொலிஸார் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை மதுஷ் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள எந்தவொரு இலங்கை அதிகாரிகளும் டுபாய் நோக்கி செல்லவில்லை என இராஜதந்திர அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டுபாயில் நடைபெற்ற விருந்து ஒன்றின் போது பாதாள உலகக் குழுவின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காருமான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட பலர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.