வெனிசுவேலாவின் எல்லை நகரங்களில் மோதல்.

வெனிசுவேலாவின் எல்லை நகரங்களில் மோதல்.

வெனிசுவேலாவின் எல்லையை ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ தலைமையிலான அரசாங்கம் மூடியுள்ள நிலையில் அந்நாட்டு எல்லையில் மோதல்கள் தீவிரமாகியுள்ளன.

வெனிசுவேலா மக்கள் கொலம்பியாவிற்கு செல்ல முயற்சித்த நிலையில் நேற்றைய தினம் இராணுவம் கண்ணீர் புகை செலுத்த முற்பட்டதன் காரணமாக அந்நாட்டு எல்லையில் மோதல் மூண்டது.

இதேவேளை வெனிசுவேலாவில் தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையினால் உணவு உட்பட அத்தியாவசிய பொருட்களை சுமந்து வரும் சரக்கு வாகனங்களை அரசு தடுத்து நிறுத்தி வருவதாலும் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவரான குவான் குவைடோ தம்மை தாமே ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து வெனிசுவேலாவில் அமைதியின்மை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.