தமிழர்களின் பிரச்சினைகளை ஜெனீவாவில் அழுத்தமாக முன்வைக்க வேண்டும்.

தமிழர்களின் பிரச்சினைகளை ஜெனீவாவில் அழுத்தமாக முன்வைக்க வேண்டும் -தவராசா

ஜெனீவா கூட்டத்தொடரில் தமிழர்கள் தொடர்பான விடயத்தை தமிழ் தலைமைகள் அழுத்தமாக முன்வைக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு அவ்வாறு முன்வைக்காவிட்டால் ஜெனீவா கூட்டத்தொடர் மீண்டும் ஏமாற்றத்தையே தருமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில, இந்த கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையிலான குழுவினர் இலங்கை தொடர்பாக தீர்மானமொன்றை கொண்டுவர முனைவதாக கூறப்படுகின்றது.

எனினும் இந்த விடயத்தில் தமிழ் தலைமைகள் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, இதற்கான தீர்வினைப் பெற வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.