யாழில் பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்தும் அநாதரவாக!

யாழில் பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்தும் அநாதரவாக!

பிள்ளைகள் அமெரிக்காவில் வசிக்கும் நிலையில், அவர்களின் தந்தை யாருமற்ற நிலையில் அநாதரவாக இருந்துள்ளார்.

அவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் 9ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தனக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிள்ளைகள் இருந்தும் மூன்று மாதங்களாக எவரும் தன்னைப் பார்க்க வரவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.

இவரின் நிலையைக் கண்டு மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் பலர் உதவிகளைச் செய்து வருகின்றனர்.