யாழில் ஆவா குழுவுக்கிடையில் மோதல்!

யாழில் ஆவா குழுவுக்கிடையில் மோதல்!

ஆவா குழுவின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரும் தற்போது தலைமறைவாகியுள்ளவருமான சன்னா என்பவருடைய வீட்டுக்குள் புகுந்து ஆவா குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

மானிப்பாய், கட்டப்பாழி ஒழுங்கையில் உள்ள வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடத்தப்பட்டது.

வீட்டுக்குள் நுழைந்த குழுவொன்று வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை பெற்றோல் ஊற்றி எரியூட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.