யாழில் வாகன விபத்து ; இளைஞர் பலி!

யாழில் வாகன விபத்து ; இளைஞர் பலி!

யாழ்ப்பாணம், சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில்நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொன்னாலை வீதி, மானிப்பாயைச் சேர்ந்த 22 வயதான சிவப்பிரகாசம் தனுசன் என்ற இளைஞரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பூநகரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த மானிப்பாயைச் சேர்ந்த 24 வயதான வசந்தகுமார் நிரோசன் என்பவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பூநகரி நோக்கிப் பயணித்தபோது சங்குப்பிட்டிப் பாலத்திற்கு அருகிலுள்ள வளைவில் திருப்பிய வேளை மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து வீதி ஓரமாகக் காணப்பட்ட மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பூநகரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.