ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை!

ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை!

வட மாகாணத்தில் நிலவும் காணிப்பிச்சினைகளை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு வட மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணிப் பிரச்சினைகளில் முதன்மையானதாக காணிகளை அளவிடுதல் காணப்படுவதால் காணிகளை அளவிட நில அளவையாளர் திணைக்களத்தில் போதிய ஆளணியினர் இல்லாமையின் காரணமாகவே ஓய்வுபெவுற்ற நில அளவையாளர்களின் சேவையினை பெற்றுக்கொள்ளும் முகமாகவே ஆளுநரால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை வட மாகாண காணி நிர்வாக திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து கொள்ளலாம்.

அவர்கள் தமது விபரத்தினை தபால் மூலமாகவோ அல்லது இணையத்தின் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

அலுவலக முகவரி – காணி நிர்வாக திணைக்களம்,
வட மாகாணம், 59, கோவில் வீதி,யாழ்ப்பாணம்.
தொலைபேசி இல – 0212220836