தமிழர்கள் அரசியல் சாணக்கியத்துடன் நகரவேண்டிய காலம் இது

தமிழர்கள் அரசியல் சாணக்கியத்துடன் நகரவேண்டிய கலாம் இது – தவிசாளர் சுரேன்

தமிழர்கள் அரசியல் சாணக்கியத்துடன் நகரவேண்டிய காலம் இது என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சி விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாள்.

அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாம் நீண்டகாலமாக அரசியல் ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராடிவந்தோம் ஆனாலும் எமது போராட்டங்கள் மழுங்கடிக்கப்பட்டதற்கு காரணம் எமது இனத்தில் இருந்த கோடரி காம்புகளே இவ்வாறானவர்களை நாம் சரியாக இனங்கண்டு மிகவும் சாணக்கியமாகவும் இராஜதந்திர ரீதியாகவும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவே இப்பொழுது நம் பொறுமையாகவும் நிதானமாகவும் நகரவேண்டியுள்ளது என்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமையவுள்ள சிறுவர் பூங்கா தொடர்பான கலந்துரையாடலிலேயே இவ்வாறான கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உபதவிசாளர் மு. கஜன் உறுப்பினர் ரமேஷ் கட்சியின் தம்பகாம வடடார அமைப்பாளர் வித்தி கிராம அபிவிருத்தயை சங்கம் ,சனசமூக நிலையத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.