கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண கர்த்தால்

கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண கர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இதனால் மாவட்டத்தின் அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலை என பல்வேறு பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் நடமாட்டம் மிகவும் குறைவடைந்துள்ளது.

அனைத்து வரத்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், சேவை சந்தையில் கறுப்பு கொடி கட்டப்பட்டு கர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளிற்கு மாணவர்கள் வருகை தராமையால் பாடசாலை வெறிச்சோடி காணப்படுவதுடன், எவ்வித கற்றல் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.
இதேவேளை அரச பேருந்து சாலையில் அனைத்து பேருந்துகளும் தரிக்க விடப்பட்டுள்ளதுடன், சேவை இடம்பெறவில்லை.

இதேவேளை தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.

கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் பூரண கர்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.