யாழில் தாயின் மரணத்தை தாங்க முடியாத மகள் தற்கொலை!

யாழில் தாயின் மரணத்தை தாங்க முடியாத மகள் தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவரின் தாயார் இறந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக யுவதி உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.