காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மகஜர் கையளிப்பு

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மகஜர் கையளிப்பு

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளித்துள்ளனர்.

இந்த மகஜர் இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டாமென்றும், குற்றவியல் நீதிமன்றிற்கு பாரப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

அத்தோடு OMP அலுவலகத்தை தாம் எதிர்ப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.