வவுனியா பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு!

வவுனியா பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு!

அனுமதியின்றி மரங்களை வெட்டுவதனால் ஏற்படுகின்ற அழிவினை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளபட்ட தீர்மானத்திற்கமைய தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து இயந்திர வாள்களையும் (செயின்சோவர்) பதிவு செய்யும் நடவடிக்கைகள் பொலிஸ் நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளபட்டு வருகின்றன.

அதற்கமைய எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன் குறித்த உபகரணங்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து உத்தரவு பத்திரமொன்றை பெற்று கொள்ளுமாறு வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது பிரதேசத்திற்குரிய பொலிஸ் நிலையங்களில் குறித்த பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.