முதலாம் தர மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை!

முதலாம் தர மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை!

இவ் வருடம் தரம் ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சுமார் 320,000 மாணர்வகளுக்கான சீருடை பற்றுச்சீட்டை இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள 42 இலட்ச மாணர்வகளுக்கான சீருடை பற்றுச்சீட்டுகளை தயாரித்தபோது புதிதாக அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைச் சேர்த்துக்கொள்ளவில்ல‍ை என்பதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியருக்கின்றது என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.