விஷச் சாராயம் அருந்தி பெண்கள் உட்பட 149 பேர் பலி!

விஷச் சாராயம் அருந்தி பெண்கள் உட்பட 149 பேர் பலி!

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 149 ஆக அதிகரித்துள்ளது.

அசாம் மாநிலம் கோல்ஹாட் மாவட்டத்தில் உள்ள சல்மாரியா தேயிலை தோட்டத்தில் ஏராளமானோர் வேலைபார்த்து வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு பெண் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் வி‌ஷச்சாராயம் வாங்கி அருந்தினர்.

இதனால் விஷச் சாராயம் அருந்திய பெண்கள் உள்பட 30 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 300 க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந் நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் பலர் உயிரிழந்துள்ளமையினால் உயிரிழந்தோரின் தொகை 149 ஆக உயர்வடைந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 10 க்கும் அதிகமானோரை கைதுசெய்துள்ளனர்.