ஒன்ராறியோவில் விபத்து : 77 வயது பெண் உயிரிழப்பு!

ஒன்ராறியோவில் விபத்து : 77 வயது பெண் உயிரிழப்பு!

ஒன்ராறியோ, ப்ரூக்ளின் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலை 7 பேர்குசன் அவெனியூவுக்கு அருகில் (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 11:30 குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரு மினிவான் மற்றும் காரும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காரின் சாரதியான 77 வயதுடைய பெண் காயமடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

இதன் பின்னர் 77 வயதுடைய குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் இருவர் சிறு காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்த அதேவேளை, விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.