இலங்கையில் பேருந்துகளில் ஒலிக்கும் பாடல்கள் தொடர்பான புதிய விதிமுறை!

இலங்கையில் பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பான புதிய விதிமுறை விரைவில் அமுலாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் குறித்த பேருந்துகளில் ஒலிக்கும் பாடல்கள் மற்றும் ஒலியின் அளவு தொடர்பிலேயே புதிய நடைமுறை கொண்டு வரப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளில் ஒலிக்கவிடப்படக்கூடிய பாடல்களை தெரிவு செய்வதற்கான கலைஞர்கள் குழுவொன்றையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த தவறும் பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.