கிளிநொச்சியிலும்  ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’

கிளிநொச்சியிலும்  ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றி கொள்வோம் எனும் தொணிபொருளில் கையொப்பம் திரட்டும் வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கையெழுத்த திரட்டும் போராட்டம் இன்று பிற்பகல் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், காணி உரிமைக்கான மக்கள் ஒன்றியம், பிரஜா அபிலாச வலையமைப்பு ஆகியன இணைந்து குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.

இன்று காலை முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று பிற்பகல் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.

கையெழுத்து திரட்டி நிறைவில் கொழும்பில் பல்வேறு தரப்பினருக்கும் மகஜர் கையளிக்க உள்ளதாகவும், மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.