சாவகச்சேரியில் மீண்டும் இறைச்சிக் கடைகள்

சாவகச்சேரியில் மீண்டும் இறைச்சிக் கடைகள்

சாவகச்சேரி நகரசபையினர் இறைச்சிக் கடைகளை மீண்டும் குத்தகைக்கு விட முடிவு செய்து அது தொடர்பான கேள்வி அறிவித்தலை கோரவுள்ளனர்.

சாவகச்சேரி நகரசபையினால் இறைச்சிக் கடைகள் கடந்த வருடம் கேள்விகள் கோரப்பட்ட போது எவரும் விண்ணப்பங்கள் பெறாத நிலையில், மீள்கேள்வி அறிவித்தல் கோரப்பட்டும் எவரும் விண்ணப்பிக்கவில்லை.

பின்னர் பொது அறிவித்தல் மூலம் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டும் ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை.

இந்நிலையில் இறைச்சிக் கடைகளை குத்தகைக்கு விடுவது தொடர்பான சிறப்பு அமர்வு சபா மண்டபத்தில் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது..

உறுப்பினர்களின் ஏகோபித்த குரலின் பிரகாரம் கேள்வித் தொகையை குறைத்து கேள்வி கோருவதென முடிவு செய்யப்பட்டது.

அடுத்து வரும் பத்து மாதங்களுக்கு ஆட்டிறைச்சிக் கடை 3 இலட்சம் ரூபாவுக்கும், மாட்டிறைச்சிக் கடை 17 இலட்சம் ரூபாவுக்கும், கோழி இறைச்சிக் கடை 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கும் குத்தகைக்கு விடுவதென முடிவு செய்ய்ப்பட்டுள்ளது.

கேள்வியில் சித்திபெறுவோர் கேள்வித் தொகையின் மூன்றிலொரு பகுதிப் பணம் வைப்பிலிடவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.