யாழில் மோட்டர் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம்!

யாழில் மோட்டர் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பயணித்த மூவர் படுகாயமடைந்தனர்.

குறித்த விபத்து ஏ9 முதன்மைச் சாலையில் யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் சந்தி வாகையடியில் இடம்பெற்றது.

சாவகச்சேரியிலிருந்து ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், வாகையடியில் திருப்ப முற்பட்ட வேளையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

மூவருக்கு கை கால் முறிந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.