புலிக்கொடி, புலி சீருடையுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம்!

புலிக்கொடி, புலி சீருடையுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம்!

முல்லைத்தீவு, ஒட்டு சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றில் கிளைமோர் குண்டு, புலிக்கொடி, புலி சீருடை போன்றவை மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக் கணக்கில் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை நீண்ட விசாரணைகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீஷெல்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து இந்த பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த வெடிபொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான இவர்கள் தற்போது அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.