மைத்திரி – ரணிலை – மகிந்தவுடன் இணைந்து பணியாற்ற தயார்!

மைத்திரி – ரணிலை – மகிந்தவுடன் இணைந்து பணியாற்ற தயார்!

அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் கிளை பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று திருகோணமலையில் நடைபெற்றது. குறித்த சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை அரசாங்கத்துடன் பேசவுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்.

“அரசியலமைப்பு திருத்த முயற்சி ஆரம்பிக்கபட்டு பல படிமுறைகளை கடந்து சென்றுள்ளது. இம்முயற்சிகள் தொடர்ந்து நீடிக்காமல் அதனை அமுல்படுத்த வேண்டும்.

மக்கள் விரும்பும் தீர்வை பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்.

எவ்வாறாயினும், எமது மக்கள் விரும்பாத, மக்களுக்கு நன்மை அளிக்காத எந்தவொரு தீர்வையும் நாம் ஒரு போதும் ஏற்கப் போவதில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.