பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய முச்சக்கரவண்டி!

பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய முச்சக்கரவண்டி!

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும் ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்த சிறிய ரக பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.