கோணாவில் பாடசாலை மாணவர்கள் நூறு பேருக்கு சீருடைகள் வழங்கிவைப்பு

கோணாவில் பாடசாலை மாணவர்கள் நூறு பேருக்கு சீருடைகள் வழங்கிவைப்பு

கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு இன்று பாடசாலைச் சீருடை வழங்கிவைக்கப்பட்டுள்ளது

இன்று பத்து முப்பது மணியளவில் கோணாவில் மகாவித்தியாலய அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இன் நிகழ்வில்
வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் அவர்களின் சொந்த நிதியில் குறித்த மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டது

இன் நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்க கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனபால பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.