பணி பகிஸ்கரிப்பால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமம்.

நாடாளவிய ரீதியில் அரச திணைக்களங்களில் கணக்காளர், திட்டமிடல் உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளமையால் பொது மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இன்று(27) புதன் கிழமை ஒரு நாள் அடையாள பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வு, சம்பளம், உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வாறு பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இன்றைய தினம் புதன் கிழமை பொது மக்கள் தினம் என்பதனால் அதிகளவான பொது மக்கள் தங்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக மாவட்டச்செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு சென்றிருந்தனர்.

ஆனால் அங்கு இவ்வாறு அலுவலர்கள் இல்லாததன் காரணமாக சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாது சிரமப்பட்டுள்ளனர்.

தூர இடங்களில் இருந்து வருகை தந்திருந்த பொது மக்கள் இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.