‘அலுகோசு’ பதவிக்கு 45 பேர் விண்ணப்பம்.

‘அலுகோசு’ பதவிக்கு 45 பேர் விண்ணப்பம்.

மரணதண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு இதுவரை பலர் விண்ணப்பித்துள்ளனர்.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதியின் நிலைப்பாட்டையடுத்து மரண தண்டனையை நிறைவேற்றும் ‘அலுகோசு’ பதவிக்கு விண்ணப்பங்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் கோரப்பட்டிருந்தன.

இந் நிலையில் அலுகோசு பதவிக்கு இதுவரை 45 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அதில் வெளிநாட்டுப் பிரஜையொருவரும் விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.