வவுனியாவில் கிரவல் மண்ணுக்குள் காணப்பட்ட மர்ம பொருள்.

வவுனியாவில் கிரவல் மண்ணுக்குள் காணப்பட்ட மர்ம பொருள்.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் இன்று வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் குண்டு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
பட்டாணிசூர் பகுதியில் உள்ள வர்தகநிலையம் ஒன்றிற்கு முன்பாக கொட்டபட்டிருந்த கிரவல் மண்ணில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் அவதானித்ததுடன். இவ்விடயம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பொலிஸார் மோட்டார் குண்டினை அவதானித்துள்ளதுடன் விஷேட அதிரடி படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் நீதிமன்ற அனுமதியின் பின்னர் குறித்த மோட்டார் குண்டினை அப்பகுதியில் இருந்து அகற்றவுள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஓமந்தை பகுதியில் இருந்து குறித்த கிரவல்மண் கொண்டுவரபட்டு வர்த்தக நிலையத்திற்கு முன்பாக பறிக்கபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.