பரந்தன் பகுதியில் பேருந்து விபத்து சாரதி உட்ப்பட நால்வர் காயம்.

பரந்தன் பகுதியில் பேருந்து விபத்து சாரதி உட்ப்பட நால்வர் காயம்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்று இரவு சுமார் பத்து முப்பது மணியளவில் தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி உட்ப்பட நால்வர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

குறித்த விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான சொகுசுப் பேருந்து ஒன்று பரந்தன் சந்தியை கடக்க முற்ப்பட்ட போது முல்லை வீதியில் இருந்து திடீர் என டிப்பர் ரக வாகனம் ஒன்று யாழ் நோக்கி வீதிக்கு ஏறியமையால் பயணிகளின் நலன் கருதி பேருந்து சாரதி வீதியின் மறுபுறத்திற்கு பேருந்தை செலுத்தி விபத்தை தவிர்க்க முற்ப்பட்ட போதும் வீதியின் மறு புறத்தில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.