மந்திகை வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும்.

மந்திகை வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும் அங்கஜன்.

பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையின் மேலதிகமான உட்கட்டுமான மேம்படுத்தல்களை அதிகரித்து சிறந்த வைத்திய சுகாதார சேவைகளை, பாதுகாப்பான முறையில் மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் (26)அன்று காலை விஜயம் செய்திருந்தார்.

வைத்தியர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேலதிக தேவைப்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டிருந்தது.

வடமராட்சி பகுதியின் 3 லட்சம் மக்களுக்கு நீண்ட காலமாக சேவையினை குறைந்த வளங்களோடு வழங்கி வருவதோடு, ஆதார வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

மாகாண ஒதுக்கீடுகள் குறைவாக காணப்படுகின்றது .எனவே வெளிநோயாளர் பிரிவு விஸ்தரிப்பு, மருத்துவ ஆய்வுகூட வசதிகள், விபத்து பிரிவுகளுக்கான சத்திர சிகிச்சை வசதிகளை விஸ்தரித்து வழங்குவதன் மூலம் அதிகரித்து காணப்பட்டு வரும் வைத்திய சேவைகளை, வடமராட்சியிலேயே நிறைவு செய்யக்கூடியதாக காணப்படும்.

24 மணிநேர சேவைகளோடு விடுதி வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்று முறையில் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

எனவும் விடயத்திற்கு பொறுப்பானவர்களுடன் பொறுப்பான விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.