நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும்!

நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும்!

நாடளாவிய ரீதியில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த போராட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

கல்வியமைச்சுக்கு முன்பாக நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் நேற்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

22 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி சேவையில் காணப்படும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரியும், 30 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.